ஊரெழு றோயல் வி.கழகம் நடத்தி வரும் வடக்கின் சமர் தொடரில் இன்றைய (11) போட்டியில் றோயல், மனோகரா அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இன்றைய முதலாவது போட்டியில் இளவாலை ஹென்றிஸ் வி.கழகமும் ஆனைக்கோட்டை கலையொளி வி.கழகமும் மோதவிருந்த போட்டியில் ஹென்றிஸ் வி.கழகம் போட்டிக்கு சமூகமளிக்கமாமையால் கலையொளிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இரண்டாவது போட்டியில் ஊரெழு றோயல் வி.கழகத்தை எதிர்த்து அல்வாய் மனோகரா வி.கழகம் பலப்பரிட்சை நடத்தின.
போட்டியின் ஆரம்பமுதல் இரு அணிகளும் சமபலத்துடன் களமாடின. இரு அணிகளும் மாறி மாறி கோல் பெறும் முயற்சியில் ஈடுபட்டன.
போட்டியின் இறுதியில் 4:4 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
வடக்கின் சமரில் நாளைய முதலாவது போட்டியில் முல்லைத்தீவு சென்யூட் வி.கழகத்தை எதிர்த்து யாழ்.ஐக்கிய அணி மோதவுள்ளது.
இரண்டாவது போட்டியில், மயிலங்காடு ஞானமுருகன் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி நவஜீவன்ஸ் வி.கழகம் மோதவுள்ளது.
