• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வாரிசு திரை விமர்சனம்

வாரிசு திரை விமர்சனம்
169
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

இளையதளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ராஷ்மிகா, யோகி பாபு என திரையுலக பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

அதுமட்டுமின்றி வம்சியின் மாஸ் கமெர்ஷியல் இயக்கத்தில் விஜய் எப்படி இருப்பார் என்பதை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். இத்தைகைய எதிர்பார்ப்பை கொண்டிருந்த விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.

ராஜேந்திர குரூப் ஆஃப் கம்பெனியின் உரிமையாளரான ராஜேந்திர பழனிச்சாமி { சரத்குமார் }, தனது மூத்த மகன் ஜெய் { ஸ்ரீகாந்த் }, மற்றும் அஜய் { ஷாம் } இருவரையும் வைத்து தனது சாம்ராஜியத்தை ஆண்டு வருகிறார். தனது இரு மகன்களை போல் தனது மூன்றாவது மகன் விஜய் ராஜேந்தரையும் { தளபதி விஜய் } தனது கம்பெனியை பார்த்துக்கொள்ளும் படி கூறுகிறார் சரத்குமார்.

ஆனால், விஜய்யோ அந்த வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்றும், நான் தந்தையின் பாதையில் செல்ல விரும்பவில்லை, தனக்கென்று தனி பாதையை அமைத்துக்கொள்ள விருபுகிறேன் என்று கூறுகிறார்.

இதனால் கோபமடையும் சரத்குமார், தனது மகன் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய விஜய் தனக்கென்று புதிய கம்பெனியை துவங்கி அதில் சாதிக்காட்ட முயற்சி செய்யும் தருணத்தில், சரத்குமாருக்கு கான்சர் என அவருடைய குடும்ப மருத்துவர் பிரபு டெஸ்ட் மூலமாக தெரிந்துகொள்கிறார்.

நீ சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என சரத்குமாரிடம் தெரியப்படுத்துகிறார். இதனால் தன்னுடைய கம்பனியை தனக்கு அடுத்து ஆளப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கட்டத்திற்கு சரத்குமார் வருகிறார்.

இந்த சமயத்தில் தனது மனைவி ஜெயசுதா ஆசைப்பட்டபடி தங்களுடைய 60ஆம் கல்யாணத்தையும் நடத்த முடிவு செய்யும் சரத்குமார், 7 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தனது மூன்றாவது மகன் விஜய்யையும் வீட்டிற்கு தனது மனைவியின் மூலம் வரவழைக்கிறார்.

இந்த 60ஆம் கல்யாண நேரத்தில் சரத்குமாரின் குடும்பத்தில் மாபெரும் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் மூத்த மகனும், இரண்டாவது மகனும் வீட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்ட, தன்னுடைய கம்பனியை யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணி தவிக்கிறார் சரத்குமார்.

இந்த நேரத்தில் தனது மூன்றாவது மகன் அவனுடைய புதிய ஸ்டார்ட்டப் மூலம் சாதித்துக்காட்டியதை பார்க்கும் சரத்குமார், விஜய்யிடம் தனது ராஜேந்திர குரூப் ஆப் கம்பெனியின் முழு பொறுப்பையும், ஒப்படைக்கிறார்.

முதலில் ஏற்க மறுக்கும் விஜய் தனது தந்தை இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்று தெரிந்தவுடன், கம்பனியின் முழு பொறுப்பையும் கையில் எடுக்கிறார். கம்பனியை விஜய் கையில் எடுத்தவுடன் வில்லன் பிரகாஷ்ராஷ் என்னென்ன பிரச்சனை முளைத்தது? வீட்டை விட்டு வெளியேறிய இரு பிள்ளைகளும் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தார்களா என்பதுதான் கதை.

தளபதி விஜய் செம மாஸான ஆக்ஷன் நடிப்பில் மிரட்டுகிறார். அதற்க்கு நிகராக காமெடி, எமோஷன், செண்டிமெண்ட் என பின்னி பெடலெடுக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றிய காட்சியிலும், தாய் மகன் பற்றிய காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

முக்கியமாக ஆக்ஷனில் மாஸ் காட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முழு படத்தையும் தாங்கி பிடித்துள்ளார். ஆனால், ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் மட்டும் தான் சற்று கிரிஞ் போல் தெரிந்தது.

கதாநாயகியாக வரும் ராஷ்மிகா கிளாமரில் ரசிகர்களை கவர்ந்தாலும், நடிப்பில் அவருக்கு பேசும்படி ஸ்கோப் இல்லை. ஆனால், நடனத்தில் பட்டையை கிளப்பிவிட்டார்.

விஜய்க்கு பின் இப்படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால், அது யோகி பாபு தான். ஆம், விஜய்க்கும் – யோகி பாபுவிற்குமான காட்சிகள் திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது.

சரத்குமார் – ஜெயசுதா இருவரும் அனுபவ நடிப்பை கண்முன் நிறுத்திவிட்டனர். ஆனால், வில்லனாக வரும் பிரகாஷ் ராஜீக்கு தான் எதிர்பார்த்த அளவிற்கு வில்லனிசம் திரையில் காணமுடியவில்லை.

ஸ்ரீகாந்த் – ஷாம் இருவரும் அண்ணன் கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியுள்ளனர். அதற்க்கு ஏற்றாற்போல் அற்புதமாக நடித்தும் இருக்கிறார்கள். பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையானதை கச்சிதமாக செய்துள்ளார். சங்கீதாவிற்கு நல்ல ரோல் ஆனால், சம்யுக்தாவிற்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை.

கேமியோ ரோலில் வரும் எஸ்.ஜே. சூர்யா திரையரங்கை அதிர வைத்துவிட்டார். அவரை போலவே எதிர்பார்க்கப்பட்ட குஷ்பூவின் கேமியோ படத்தில் இடம்பெறவில்லை. இதுவே சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

குடும்பம் என்றால் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று கூற வரும் வம்சி, எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், திரைக்கதையில் சற்று சொதப்பியுள்ளார். முதல் பாதியில் இடம்பெறும் பல காட்சியில் போர் அடிக்கிறது. தேவையில்லாத இடத்தில் இடம்பெறும் ஜிமிக்கி பொண்ணு பாடல், ரொமான்ஸ் என்ற பெயரில் கிரிஞ் காட்சிகள்.

முதல் பாதியில் சொதப்பியதை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிட்டார்.மாஸ் ஆக்ஷன் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டது. என்னதான் கமெர்ஷியலாக இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமா என்று கேட்கும் அளவிற்கு இரண்டாம் பாதியில் சண்டை காட்சிகள் அமைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக அரைத்த அதே மாவை தான் தற்போது தமிழில் அரைத்துள்ளார் வம்சி. இருந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

தமனின் ரஞ்சிதமே, தீ தளபதி சூப்பராக ஒர்கவுட் ஆகியுள்ளது. பின்னணி இசையில் பின்னிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விஜய்க்கு மாஸாக ஒவ்வொரு பிஜிஎம்-மும் அமைந்திருந்தது.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிரவீன் கே.எல் எடிட்டிங் படத்திற்கு பலம். திலிப் சுப்ராயன், பீட்டர் ஏயின் ஸ்டண்ட் விஜய்க்கு மட்டுமே மாஸை அதிகரிக்கிறது. ஜானி, ஷோபி, ராஜு சுந்தரம் மூவரின் நடன இயக்கும் அற்புதம்.

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக வாரிசு அமைந்துள்ளது.

 

Tags: cinemaThamil oliThamiloli news


Previous Post

கட்டுப்பணத்தைஏற்கவும் – தேர்தல் திணைக்களம் அதிரடி உத்தரவு

Next Post

துணிவு மாஸ்

Next Post
துணிவு மாஸ்

துணிவு மாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk