கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடுப் பகுதியில் நேற்று முன்தினம் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
26 வயதுடைய ரஜீவன் பிரியவதனா குடும்பப் பெண்ணே தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே காதலித்து திருமணம் முடித்துள்ளார். இவ்வாறான நிலையில் அவர் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானதாக கணவர் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த முரண்பாடே குறித்த பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
