மேடம் – புதிய முயற்சி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரி அடங்குவார்கள்.
இடபம் – காலையில் குழப்பம் நீடித்தாலும் அதன்பின் உங்கள் முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த வருமானம் மதியத்திற்கு மேல் வந்து சேரும். நிதிநிலை சீராகும்.
மிதுனம் – காலையில் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அதனால் நன்மை உண்டு. செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும்.
கடகம் – காலையில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் செலவு அதிகரிக்கும்.
எதிர்பார்த்த தொகை ஒன்று கைக்கு வரும் என்றாலும் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
சிம்மம் – தடைபட்டிருந்த வருமானம் வந்து சேரும். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
தொழிலில் இருந்து வந்த சங்கடம் விலகும். நண்பர்களால் பணவரவும் அதிகரிக்கும்.
கன்னி – நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கோரிக்கை நிறைவேறும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
துலாம் – இரண்டு நாட்களாக இருந்து வந்த நெருக்கடி விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
விருச்சிகம் – உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வரவு செலவில் இழுபறி உண்டாகும்.
காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.
தனுசு – துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்கு ஒன்று சாதகமாகும்.
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம் – அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை விலகும்.
உத்தியோகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். மறைமுக எதிரியை கண்டறிவீர்கள்.
கும்பம் – நேற்றுவரை இருந்து வந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும்.
மீனம் – எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். அரசு வழியிலான முயற்சிகளில் கவனம் தேவை. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
