முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ்தேசிய கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி இளைஞர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறார்.
முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்பவரே குறித்த போராட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றார்.
தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில், அவரின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று காலை முதல் 11.00 மணி வரை புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து வர்த்தக சங்கங்களும் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
