ஆந்திர மாநிலம் – வெடுரு குப்பம் – நக்லம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேஜாஸ்ரீ (வயது 25). தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
சேகர் வேலைக்கு சென்ற பின்னர் தேஜாஸ்ரீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு உள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (10) சேகர் வேலைக்கு செல்வதாக தேஜாஸ்ரீயிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால், அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை கண்காணித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேகர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து சேகர் வீட்டிற்குள் சென்றபோது தேஜாஸ்ரீ அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனைக் கண்ட கணவர் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த தேஜாஸ்ரீ வலியால் அலறி துடித்தார். பொலிஸார் சேகரை கைது செய்தனர்.
