யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பெண்ஒருவரும், 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக மேற்க்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
