கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை, கல்வியங்காடு மடத்தடி பகுதிகளில் நீண்டகாலமாக திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த திருட்டு ஆசாமி ஒருவர் நேற்று (11) கோப்பாய் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை பகுதியில் திருடிய மாட்டினை விற்பனை செய்வதற்கு முயற்சித்த வேளையில், மாட்டின் உரிமையாளரால் மாடு இனங்காணப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். 24 வயதுடைய கல்வியங்காட்டைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
