மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பகுதியில் அதி வேகம் காரணமாக இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து கோரவிபத்துக்கு
உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (13) அதிகாலை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்த குறித்த பேருந்து ஊறனிச்சந்தியில் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளனாது.
குறித்த விபத்தில் இரண்டுபேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து தலைமையக பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.
