முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே (வயது 71) திடீர் சுகயீனம் காரணமாக நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
நாடளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், சிறு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண அமைச்சர், வடமாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவர் ஆகிய பதவிகள் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
