மேடம் – கவனமாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
இடபம் – உங்கள் எண்ணம்போல் செயல்படுவீர்கள். நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும்.
வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
மிதுனம் – நிதானமாகச் செயல்பட்டுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் கோயிலுக்கு செல்வீர்கள்.
கடகம் – வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.
வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை அதிகரிக்கும்.
சிம்மம் – உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரி ஆதரவுடன் எதிர்பார்ப்பு ஒன்று பூர்த்தியாகும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபமான நாள்.
கன்னி – தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
துலாம் – ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
செயல்களில் தாமதம் ஏற்படும். மனதில் குழப்பம் ஏற்படும். யோசித்து செயல்பட நன்மை ஏற்படும்.
விருச்சிகம் – நண்பர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வீடு தேடி வரும்.
தனுசு – உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணி இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மகரம் – குடும்பத்தில் ஒருவரால் முயற்சி ஒன்று நிறைவேறும். சேமிப்பில் கவனம் தேவை.
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். நிதி நிலை சீராகும்.
கும்பம் – திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் தொழிலில் கஷ்டத்தை சந்திப்பீர்கள்.
மீனம் – இருப்பிடத்தை மாற்றம் செய்வீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
