யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
