யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை நிறுத்துமாறு கோரியும், இந்திய மீனவர்களால் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனத்தைத் தெரிவித்தும் இன்று (13) கவனயீர்ப்பு போராட்டம் யாழில் முன்னெடுக்கப்பட்டது.
குருநகர், பாசையூர் மற்றும் மண்டைதீவு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று காலை 10மணிக்கு யாழில் கண்டனப் பேரணி ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த பேரணியானது குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்திலிருந்து ஆரம்பமாகி பேரணியாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்திற்கு சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
