உள்ளூராட்சி தேர்தலுக்காக தமிழர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியில் மீண்டும் இன்று (14) விக்கினேஸ்வரன் இணைந்து கொள்வதற்கான நிலைமைகள் காணப்படுவதாக அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி உருவாக்கத்திற்கான பேச்சுக்கள் நேற்று இடம்பெற்றிருந்த வேளையில், எச்சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக எழுந்த சரச்சையால் விக்கினேஸ்வரன் தரப்பினர் கூட்டத்தை விட்டு இடைநடுவில் விலகிச் சென்றனர்.
நேற்றயை சம்பவம் தொடர்பிலான முழு விபரங்களையும் தமிழ் ஒளி முழுமையான தகவல்களோடு பகிர்ந்திருந்தது.
இந்நிலையில், ரெலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய இணைந்து கூட்டாக போட்டியிடப்போவதாக நேற்று (13) அறிவித்திருந்தன.
இதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கட்சிகளின் சில முக்கியஸ்தர்கள் விக்கினேஸ்வரனுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
அதன்படி, விக்கினேஸ்வரன் தரப்பினர் கூட்டணியுடன் மீண்டும் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி விக்கினேஸ்வரன் இணையும் பட்சத்தில் மீன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும், விக்கினேஸ்வரன் செயலாளராக பதவி வகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
விக்கினேஸ்வரன் புதிய கூட்டணியுடன் இணையலாம் சில வேளைகளில் இணையமால் விடலாம் என்றும் யாழ்ப்பாண அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
