இந்த பொங்கல் விஜய், அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.
வாரிசு – துணிவு என இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்து திரையரங்குகள் திருவிழாவாக மாறியுள்ளன.
முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வசூல் வேட்டை நடாத்தி வருகின்றன.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இலங்கையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் வாரிசு படம் இரண்டு நாள் முடிவில் 11.80 கோடி (2.62 கோடி இந்திய ரூபாய்) ரூபாய்களை வசூலித்துள்ளது.
அதேபோல், துணிவு திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 7.38 கோடி (1.64 கோடி இந்திய ரூபாய்) ரூபாய்களை வசூலித்துள்ளது.
அந்த வகையில் முதல் இரண்டு நாட்களில் வாரிசு படம் இலங்கையில் முன்னிலை பெற்றுள்ளது.
