ஊரெழு றோயல் வி.கழகம் நடத்தும் “வடக்கின் சமர்” தொடரில் குழுநிலைப் போட்டிகள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இன்று (14) இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் நவிண்டில் கலைமதி வி.கழகத்தை எதிர்த்து யாழ்
ஐக்கிய வி.கழகம் மோதவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் அடுத்து சுற்றுக்குள் நுழைவதற்கான முக்கிய போட்டியாக உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது போட்டியில், வடமராட்சி நவஜீவன்ஸ் வி.கழகத்துடன் அல்வாய் மனோகரா வி.கழகம் மோதவுள்ளது. வடமாரட்சியின் இரண்டு பலமான அணிகள் மோதுமவதால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
