தமிழர்களின் பண்பாட்டு பண்டிகைகளில் ஒன்றான தைப்பதொங்கல் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு முன்பள்ளிகளில் மாதிரி பொங்கல் பண்டிகை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளி சிறார்களின் மாதிரி பொங்கல் விழா இன்று (14) முன்பள்ளி முன்றலில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
