உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய கட்சிகளின் புதிய கூட்டின் கைச்சாத்து இன்று (14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி திண்ணைவிடுதியில் இவ்நிகழ்வு இடம்பெற்றது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இவ்கூட்டணியில் எந்தச்சின்னத்தில் போட்டியிடுவது சர்ச்சையில் நேற்றைய கலந்துரையாடலில் இடைநடுவில் விலகிச்சென்ற விக்கினேஸ்வரன் தரப்பினர் மீண்டும் இணைந்து கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டிருந்து.
எனினும், இன்றைய கூட்டணியின் உடன்படிக்கை கைச்சாத்தில் விக்கினேஸ்வரன் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை.
புதிய கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் சின்னமாக குத்துவிளக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக்கூட்டணியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகவும் இயங்கும் எனவும் கட்சித்தலைவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
