பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டொன் காய்கறிகள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் என்ற விலையில் விற்கப்படுகிறது.
இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம்.
