உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நாளை (15) பொங்கல் விழா பி.ப 2.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற உள்ளது.
அமைப்பின் தலைவர் மருத்துவர் வே.கணேசவேல் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தயாபரன் காயத்திரி தம்பதிகள் (கனடா), திருமதி.மதுரநாயகி (ஓய்வு நிலை பிரதி அதிபர்), திருமதி.ஜெ.திருவேணி (ஜேர்மனி) ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
பொங்கல் நிகழ்வுடன், உரும்பிராய் முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
