வாரியபொல – ரம்புகனன வெலவ பிரதேசத்தில் நேற்று (13) 28 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மோதலின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிந்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும், உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
