கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலைப் பகுதியில், வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளைப் பறித்த சம்பவம் நேற்று (13) இரவு பதிவாகியது.
இருபாலை டச்சு வீதிப் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்தவரை கழுத்தில் வாளை வைத்து மிரட்டி இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
