ஜனநாயக போராளிகள் கட்சி மீது தேவையில்லாத விமர்சனங்களை விக்கினேஸ்வரனை முன்வைக்கவேண்டாமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணிக்கு தன்னை செயலாளராக நியமிக்க வேண்டுமென்றே விக்கினேஸ்வரன் வலியுறுத்தியதாகவும், அவர் வெளியேறியதற்கு ஜனநாயக போராளிகள் கட்சி காரணம் இல்லை என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“நேற்று இரவு மற்றும் இன்று காலை வரை விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடினேன்.
ஆயத போராட்டத்தில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் பலியனாலும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான போரளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதற்கு எவருக்கும் அருகதை கிடையாது.
அனைவருடனும் சேர்ந்து இயங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரக இருக்கின்றது.
ஏனையவர்கள் இதில் இணையவில்லை என்றால் அதற்கு தாங்கள் பொறுப்பு இல்லை” – என்றார்.
