மேடம் – உங்கள் செயல்களில் இன்று ஆதாய நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்விக்கும்.
இடபம் – நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இன்று உங்களை வந்து சேரும். செயல்கள் இலாபமாகும். தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுனம் – கோயில் வழிபாடு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த வருவாய் வரும். புதிய முயற்சி லாபமாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம் – மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். நெருக்கடிகளை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். ஆதாயமான நாள்.
சிம்மம் – நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். லாபமான நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பழைய பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
கன்னி – வரவுகளில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
துலாம் – கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தின் நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம் – எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். கோயில் வழிபாடு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னைகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு – நிதி நிலையில் இருந்த சங்கடங்கள் தீரும். திடீர் வரவால் மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
மகரம் – தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கும்பம் – நண்பர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தி வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம் – உங்கள் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவைப்படும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் மனம் நினைப்பதை உங்களால் செயல்படுத்த முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும்.
