தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு தமிழர் பகுதிகளில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், புண்ணியபூமியான நாவற்குழிச் சந்தியில் நாவற்குழி இளைஞர்களால் பொங்கல் விழா இன்று (15) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஏராளமான இளைஞர்கள் இவ் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் (வேட்டி) இளைஞர்கள் பொங்கல் விழாவில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
தற்காலத்தில் இளைஞர்கள் இப்படியான முன்மாதிரியான செயல்களில் ஈடுப டுவது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
