தேசிய பொங்கல் விழா நிகழ்விற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாகவிகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்தார்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
