தலைவர் ஆரம்பித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தவர்கள இனிமேல் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (15) அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்த நிலையில், புதிய கூட்டணியை உருவாக்கிய சிலர் நாங்கள் தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தலைவர் உருவாக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுடைய சுயலாப அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக த.தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தி வருபவர்களை மக்கள் இனியும் நம்பமாட்டார்கள்.
ஶ்ரீ லங்கா சுகந்திரக்கட்சி வடக்கு – கிழக்கில் தனித்து கைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது” என்றார்.
