யாழ்ப்பாணத்திற்கு தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நல்லூருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகைதந்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சில இளைஞர்கள் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
