மேடம் – செயல்களில் சங்கடம் ஏற்பட்டாலும், நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இலாபமாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
இடபம் – மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்கள் துணையுடன் ஒரு பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். புதிய முயற்சி வெற்றியாகும்.
மிதுனம் – மனதில் புதிய உற்சாகம் தோன்றும். குடும்ப சொத்து விவகாரம் பற்றி உறவினரிடம் ஆலோசிப்பீர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். பெரியோரின் ஆதரவு நன்மையை உண்டாக்கும்.
கடகம் – திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். திருப்பு முனையான நாள். குடும்பத்தினர் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
சிம்மம் – வேகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி – குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். உங்கள் பேச்சு சாதுர்யத்தால் ஒரு செயல் லாபமாகும்.
துலாம் – உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்னை இன்று தீர்வுக்கு வரும்.
மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம் – வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வருமானத்தில் தடைகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
தனுசு – நீங்கள் எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத்தேடி வரும். ஆதாயமான நாள்.
உங்கள் செயல்களில் இன்று விவேகம் இருக்கும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
மகரம் – தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் நன்மையாகும். எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும்.
கும்பம் – பேச்சிலும் செயல்களிலும் நிதானம் தேவை. மற்றவர்களால் உங்கள் மனநிலை பாதிக்கும். எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். சிறிய வார்த்தைகள் கூட பிரச்னைக்கு காரணமாகி விடும்.
மீனம் – மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நன்மையான நாள். உங்கள் செயலில் விவேகம் இருக்கும். பிறரால் முடிக்க முடியாத வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.
