ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளை முதலைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
கடந்த 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது 2 வெள்ளை முதலைகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு கணக்கிட்டபோது 16 ஆக இருந்தது. தற்போது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 20 வெள்ளை முதலைகளாக அதிகரித்துள்ளது.
