வட்டுக்கோட்டை- அராலி உப்புவயல் குளத்தில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதத் தீர்த்தம் இன்று (16) கலக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை உப்புவயல் பகுதியில் பட்டிப்பொங்கல் நிகழ்வு இன்று கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதத் தீர்த்தத்தை குளத்தில் கலந்தார்.
அதனைத்தொடர்ந்து பட்டிப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், நாக விகாரை விகாரபதி, வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
