ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.
கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் முதல் பிரதியை நிகழ்வின் பிரதம விருந்தினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வெளியிட, கிளிநொச்சி இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் தலைவர் திரு கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர்
த.குருகுலராஜா வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் போராளி நிகழ்வில் அறிமுகவுரையை செந்தூரனும், வெளியீட்டுரையை பிரதேச சபை உறுப்பினர் அ. சத்தியானந்தனும் வழங்கினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தீபச்செல்வன் மனிதநேயம் மிக்க தலைசிறந்த படைப்பாளி என்று குறிப்பிட்டதுடன் கொள்கைக்காகவும் இனப்பற்றுக்காக உறுதியோடு பயணிக்கும் தீபச்செல்வன் ஒரு இலக்கியப் போராளி என்றும் புகழராம் சூட்டினார்.
