தென்மராட்சி மிருசுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த நாகபாம்பை நவர் ஒருவர் திருடிச்சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது.
அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
