காங்கேசன்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாவிட்டபுரம் பகுதியில், சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

