யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் இன்று (17) யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாக நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொங்குதமிழ் தொடர்பான நினைவுரை மற்றும் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் ஊடக அறிக்கை வெளியீடு என்பன இடம்பெற்றன.
