வவுனியா கனகராயன்குளத்தில் பாரிய விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளது.
லொறி வாகனமொன்றை வேகமாக செலுத்தி வந்த சாரதி, உறக்க மயக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இரண்டு உழவு இயந்திரங்களில் மோதியதால் பாரிய விபத்து இடம்பெற்றது.;
இவ்விபத்தில் உழவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால், ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் சாரதி மீது தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சாரதியையும் சாரதியுடன் வந்தவரையும் மீட்டு பொலிஸ் ஒப்படைத்தனர்.
