பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (17) காலை 6.30 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
