ஊரெழு றோயல் வி.கழகம் நடத்திவரும் “வடக்கின் சமர்” தொடரில் குழுநிலைப் போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
அவ்வகையில், உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளை (18) இடம்பெறும் முதலாவது போட்டியில் நவிண்டில் கலைமதி வி.கழகத்தை எதிர்த்து யாழ்.ஐக்கிய வி.கழகம் மோதவுள்ளது.
இரண்டாவது போட்டியில், ஊரெழு றோயல் வி.கழகத்தை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் வி.கழகம் மோதவுள்ளது. இரண்டு கழகங்களுக்கும் இப் போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமைவதால் அனல் பறக்கும் ஆட்டமாக அமையுமென ரசிகர்கள் அங்கலாய்கின்றனர்.
