யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளை (19) இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், தமிழரசுகட்சி சார்பில் மீண்டும் இமானுவேல் ஆர்னோல்டை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசுகட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது தொடர்பாக நேற்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் இன்று (18) காலை கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தலைமையில், மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், சொலமன் சிறில், ஆர்னோல்ட் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், ஆர்னோல்டே நாளை இடம்பெறவுள்ள யாழ்.மாநகரசபையின் முதன்மை வேட்பாளராக தமிழரசுகட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
