ஊரெழு றோயல் வி.கழகம் நடத்திவரும் வடக்கின் சமர் தொடரின் குழுநிலைப் போட்டிகள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
இன்று (18) இடம்பெற்ற ஊரெழு றோயல் வி.கழகம் மற்றும் மயிலங்காடு ஞானமுருகன் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
முற்பாதியில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதற்பாதி முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் ஞானமுருகன் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பாக விளையாடிய றோயல் பதில் கோலினை போட்டு ஆட்டத்தினை சமப்படுத்தியது.
தொடர்ந்த ஆட்டத்தில் ஞானமுருகன் அணி வழமையான தமது வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 3 கோல்களை பதிவு செய்தன.
போட்டியின் இறுதியில் 4:1 என்ற கோல்கணக்கில் ஞானமுருகன் வி.கழகம் றோயல் வி.கழகத்தை வெற்றி கொண்டது.
வடக்கின் சமரில் நாளைய போட்டியாக யாழ்.மண்ணில் அசுரபலம் கொண்ட அணிகளான நாவந்துறை சென்.மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி டைமன்ஸ் அணி மோதவுள்ளது.
