நித்திரையில் இருந்த இளைஞன் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கொட்டவெஹெர, கெலேகம பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த இளைஞனின் தாத்தாவே இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயதுடைய நவோத் தில்ஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
