ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ப.உமாமகேஸ்வரனும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
