நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு 14 நாட்களுக்கு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
