உள்ளூராட்சிசபை தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு இன்று (18) தாக்கல் செய்தது. நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.
கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.
பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
