நெஞ்சுப்பகுதியில் கடந்த 16 ஆம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் மீது
தேங்காய் வீழ்ந்த நிலையில், சிகிச்சைக்காக நேற்று வைத்தியசாலை செல்லும்போது இடையில் உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வாகனச்சாரதியாக பணிபுரியும் மேற்குறித்த நபர் வீதியின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னைமைரத்தின் கீழ் களைப்பாறியுள்ளார்.
இதன்போதே நெஞ்சுப்பகுதியில் தேங்காய் விழ்ந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக செல்லும்போதே இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
