பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் இன்று (18) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு விசாரணை அழைக்கப்பட்டு 3 மணிநேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 15 ஆம் திகதி யாழில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலே வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
