ஹெரோயின் போதைப் பொருள் பாவணைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வரணி இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வேலுப்பிள்ளை ராஜ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த 26 ஆம் திகதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடந்த 10 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியான ஹெரோயின் பாவணையே உயிரிழப்புக்கு காரணமென இறப்பு விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
