மேடம் – முயற்சியில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பொருளாதார நெருக்கடிகள் விலகும். லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
இடபம் – உங்களது முயற்சியில் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியாமல் போகும். திட்டமிட்ட செயல்களில் பின்னடைவுகள் ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.
மிதுனம் – உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பிறரால் முடியாத ஒரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கடகம் – இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். நன்மையான நாள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.
சிம்மம் – பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
கன்னி – உங்களது மனம் காட்டும் வழியில் சென்று, நினைத்ததை அடைவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
துலாம் – எதிர்பாலினர் உதவியுடன் நீங்கள் நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள். இலாபமான நாள்.
துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
விருச்சிகம் – சுபச்செலவுகள் உண்டாகும். குழந்தைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
தனுசு – மனதில் குழப்பம் ஏற்படும். உங்களது செயல்களில் தடுமாற்றமும் அலைச்சலும் உண்டாகும்.
முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம் – அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் முயற்சி ஒன்று நிறைவேறாமல் இழுபறியாகும்.
உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
கும்பம் – உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
பழைய முதலீட்டில் இருந்து இன்று லாபம் வரும். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி கூடும்.
மீனம் – உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலையில் உண்டான நெருக்கடிகளை சரி செய்வீர்கள். உங்களது செயலை பிறர் பாராட்டுவர்.