இந்தியா – மும்பை- கோவா பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 5 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ரேபோலி பகுதியில் லொரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் கோர விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
