கடந்த ஆண்டு ஜீன் மாதம் 14ஆம் திகதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஒக்ரோபர் மாதம் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகி வைக்க உள்ளார்.
